உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பனாற்றில் மாசிமக தெப்பல் உற்சவம்

உப்பனாற்றில் மாசிமக தெப்பல் உற்சவம்

கடலுார்: கடலுார் துறைமுகம் உப்பனாற்றில் தெப்பல் உற்சவம் நடந்தது.  கடலுார் துறைமுகம் உப்பனாற்றில் மாசிமகத்தையொட்டி சிங்காரத்தோப்பு வெள்ளரி அம்மன், சலங்குகாரத் தெரு நாகமுத்து மாரியம்மன், ஆற்றங்கரை தெரு ஏழை மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதேப் போன்று தைக்கால்தோணித்துறை பரவனாற்றிலும் தெப்பல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !