சிவகாசி சிவன்கோயிலில் தங்கதேர் பவனி
ADDED :3144 days ago
சிவகாசி: சிவகாசி சிவன்கோயிலில் தெய்வீக பேரவை அமைப்பின் சார்பில் தங்கத் தேர் உருவாக்கப்பட்டு வந்தது. இதன் பணிகள் கடந்தாண்டு துவக்கத்தில் முடிந்து தங்கத்தேரோட்டம் நடந்தது. அதன்பின் விழாக்களில் கூட தங்கத்தேர் பவனி நடைபெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் மீண்டும் தங்கத்தேர் பவனி நடந்தது. நகரச் செயலாளர் பொன் சக்திவேல், அசன்பக்ரூதீன், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் அண்ணாகாலனி திருமுருகன், சந்தமாரிபாண்டியன் கலந்து கொண்டனர்.