வீட்டில் செல்வ கடாட்சம் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
ADDED :3137 days ago
வீட்டில் லட்சுமிவாசம் எப்போதும் நிறைந்திருக்க கீழ்க்காணும் நியதிகளைக் கடைப்பிடிக்கலாம். அனுதினமும் வீட்டில் காலை - மாலை இரண்டுவேளையும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சந்தனம் லட்சுமிக்கு உகந்த ஒன்று. எனவே ஸ்வாமிப் படங்கள், விளக்குகளைச் சந்தனத்திலகம் இட்டு அலங்கரிப்பதுடன், அன்பர்களும் நெற்றியில் சந்தனத்திலகம் வைத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலைகளால் லட்சுமிதேவியை அர்ச்சித்து வழிபட்டால், செல்வ கடாட்சம் உண்டாகும். வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் திருமகளுக்கு உகந்தவை. மேலும், அவள் வெண்ணெயில் வசிப்பவள் ஆதலால், இந்த இரண்டு நாள்களிலும் வெண்ணெய் உருக்குதல் கூடாது.