குருமுத்தீஸ்வரர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள குருமுத்தீஸ்வரர் கோவில், புனரமைக்கப்பட்டு, நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குருமுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், திருகுறிப்பு தொன்ட நாயனாருக்கு சிவபெருமான் காட்சி அளித்ததாக, பக்தர்கள் நம்புகின்றனர். மிகவும் பழமை வாய்ந்த இத்கோவில், புனரமைக்கப்பட்டு உள்ளது.கடந்த 2012ம் ஆண்டு, துவங்கிய திருப்பணியில், கோவிலில், லிங்க கோபுரம், கொடி மரம், ஆலய விமானங்கள், கோபுரங்கள், சிறப்ப வேலைப்பாடுகளும், வர்ண வேலைபாடுகளும் பக்தர்கள் உதவியுடன் நடந்தேறியது. இக்கோவிலில், குருமுத்தீஸ்வர், ரீகால பைரவர், சூரியபகவான், ஸர்ப விநாயகர், நவகிரக நாயகர்கள் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.கோவில் முன்பாக பிரம்மாண்டமான சிவ லிங்கத்தின் மேல், ஐந்து தலை நாகம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா, நாளை, காலை 10:30 மணி முதல், 12:00 மணி வரை நடைபெற உள்ளது.