குன்னுார் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா
ADDED :3144 days ago
குன்னுார்: அருவங்காடு பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் 44வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவையொட்டி, கணபதி ேஹாமம், சுத்தி கலச தீபாராதனை நடந்தது. மாலையில் கோவிலில் துவங்கிய ஐயப்பன் ஊர்வலம் பாலாஜி நகர், மஞ்சிதளா, அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை குடியிருப்புகள் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. இதில், செண்டை வாத்தியங்கள் முழங்க தாலப்பொலி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில் அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நிரந்தர தலைவர் நீலகண்டன், தலைவர் கிருஷ்ணன், செயலாளர் சுரேஷ்பாபு நிர்வாகிகள், மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.