திருமலையில் 24 மணி நேர மருத்துவ சேவை
திருப்பதி: திருமலையில் உள்ள காத்திருப்பு அறைகளில், 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிக் கும் வசதியை ஏற்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி, திருமலைக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில், ஏழுமலையான் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் இதய, நீரிழிவு, மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, உடல் நலக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால், காத்திருப்பு அறைகளில் மருத்துவ மையம் துவங்கப்பட்டது. டாக்டர் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக, மருத்துவ மையங்கள் முழு நேரமும் செயல்படவில்லை. பக்தர்களின் தேவையை கருத்தில் வைத்து, தேவஸ்தானம் தற்போது, அனைத்து மருத்துவ மையத்திலும் ஒரு டாக்டர், இரு செவிலியர்கள், ஒரு பாரமெடிக்கல் ஊழியரை, 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. அதனால் இனி, 24 மணிநேரமும் காத்திருப்பு அறைகளில் உள்ள மருத்துவ மையங்கள் திறந்திருக்கும். விலையுயர்ந்த மருந்துகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.