பழநி முருகன் கோயிலுக்கு தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வருகை!
ADDED :3133 days ago
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்காவடிகளுடன் வருகின்றனர். கொடுமூடி தீர்த்தக்காவடிக்கு பெயர்பெற்ற, பங்குனி உத்திரம் திருவிழா பழநி முருகன்கோயிலில் ஏப்.,3ல் துவங்கி 12வரை நடக்கிறது. தற்போதே திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், தீர்த்த காவடிகளுடன் பாதயாத்திரையாக பழநிக்கு வந்தவண்ணம் உள்ளனர். மூலவருக்கு தீர்த்தம், பால்அபிஷேகம் செய்துவழிபடுகின்றனர். இனிவரும் நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் கோயில், நகராட்சிநிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.