உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செந்தூர காளியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன்

செந்தூர காளியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன்

தும்பல்: தும்பலில், ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தும்பல் செந்தூர காளியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணியளவில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காலை, 10:00 மணியளவில் உச்சகால பூஜை, கிடா வெட்டுதல் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல், அலகுகுத்துதல், மாவிளக்கு மற்றும் அக்னி கரகம் எடுத்தல் நடந்தது. தொடர்ந்து நடந்த வண்டி வேடிக்கையில், காளியம்மன் மற்றும் கருப்பணார் வேடமிட்டும், நரசிம்மர் அவதார காட்சிகளை விளக்கும் வகையிலும், பக்தர்கள் பலர் வேடமிட்டு, ஊர்வலம் வந்தனர். இன்று மாலை, 6:00 மணிக்கு மேல், அபி?ஷக ஆராதனை, அம்மனுக்கு பால்குடம் எடுத்தல் நடக்கிறது. நாளை, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !