திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :3289 days ago
திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், பங்குனி மாதம் முதல் நாளையொட்டி, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம், பங்குனி மாத முதல் நாளையொட்டி, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில், அதிகாலை, 5:00 மணிக்கு, யாகசாலையில், ஐந்து கலசங்கள் அமைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுந்தர விநாயகருக்கு பால், பன்னீர், தேன் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. மாலையில், மூலவருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் நாளில் இது போல் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.