பழமாபுரம் பகவதியம்மன் கோவிலில் திருவிழா
ADDED :3132 days ago
க.பரமத்தி: க.பரமத்தி அருகே, புன்னம் பழமாபுரத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. கடந்த, 26ல் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கிய நிலையில், காவிரியாற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்துச் சென்றனர். கடந்த, 12ல் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடந்தது. அன்றிரவு கோவிலில் பொங்கல் வைக்கப்பட்டு, மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கிடா வெட்டுதல், பகவதி அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.