உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் விழா: தீயணைப்பு துறையினர் தயார்

மாரியம்மன் கோவில் விழா: தீயணைப்பு துறையினர் தயார்

ஈரோடு: மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, தீயணைப்பு வாகனங்களை கோவில் அருகே நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் இரவு, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். விழாக் காலத்தில் கோவிலைச் சுற்றி கடைகள் அமைக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக, பக்தர்கள் மற்றும் கடைகளுக்கு பாதுகாப்பாக, கோவில் எதிரே உள்ள மாநகராட்சி அலுவலகத்தில், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டும், தீயணைப்பு வீரர்களுடன், வாகனங்களை, 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 18 முதல், ஏப்., 2 வரை, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஷெட் அமைக்கப்படும். அங்கு தீயணைப்பு வாகனம், 15 வீரர்களுடன் தயார் நிலையில் இருக்கும். வரும், 28ல், காரை வாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவிலில் நடக்கும் பூ மிதித்தல் விழாவுக்காக, அங்கும் ஒரு தீயணைப்பு வாகனம் வீரர்களுடன் நிறுத்தப்படும். ஏப்., 1ல், நடக்கும் கம்பம் ஊர்வலத்தின்போது, சிறிய ரக தீயணைப்பு வாகனம், ஐந்து வீரர்களுடன் ஊர்வலத்தை பின் தொடரும். இதற்கான ஏற்பாடுகளை தீயணைப்பு துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !