சிருங்கேரி மடம் சுவாமிகள் ஆன்மிக பயணம் துவக்கம்
கோபி, சிருங்கேரி சாரதா மடம் சுவாமிகள் பாரதி மஹா சன்னிதானம், அவரது சிஷ்யர் விதுசேகர பாரதி சன்னிதானம் ஆகியோர் ஆன்மிக பயணத்தை கோபியில் நேற்று துவக்கினர். ஈரோடு மாவட்டம், கோபிக்கு நேற்று மாலை, 6:00 மணிக்கு வருகை புரிந்த சுவாமிகளுக்கு, கோபி சிருங்கேரி மடத்தின் நிர்வாகிகள், பூர்ண கும்ப மரியாதை அளித்தனர். பாரதி தீர்த்த மஹா சன்னிதானம், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசுகையில்,நாம் தப்பு காரியம் செய்தால், அதற்குண்டான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். பாவத்தை சிரித்து கொண்டே செய்தால், பலன் அழுது கொண்டே இருப்பதுபோல் கிடைக்கும். அதனால், எதையும் யோசித்த செய்ய வேண்டும். நல்லதா, கெட்டதா என பலனை அறிந்து செய்ய வேண்டும். யாருக்கும் தொந்தரவு செய்தால், அது பாவம். நம் வாழ்க்கை நல்ல மனநிலையில் நடந்தால், ஓர் அர்த்தம் உண்டு. இல்லையென்றால் மனித பிறவி கிடைத்தும் வீணானதற்கு சமமாகும், என்றார்.