உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதன கோபால சுவாமி கோயிலில் ராமானுஜரின் ஆண்டு விழா

மதன கோபால சுவாமி கோயிலில் ராமானுஜரின் ஆண்டு விழா

மதுரை: மதுரை மதன கோபால சுவாமி கோயிலில் மார்ச் 18 முதல் ஏப்., 2 வரை ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா நடக்கிறது. இதனையொட்டி, தினமும் மாலை 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சி, பேச்சுப் போட்டிகள், நாட்டிய நாடகங்கள் நடக்கின்றன. இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை அழகர்கோவில் உ.வே. கோமடம் சுவாமியால், தமிழில் வேதம், மறைந்தது தோன்றியது, சோழராஜனின் வைராக்கியம் உள்ளிட்ட 16 தலைப்புகளில் உபன்யாசம் நடக்கிறது. ஏப்., 2 மாலை 4:00 மணிக்கு, கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். 12 பாகவதர்களுக்கு ஸ்ரீராமானுஜ கருணாபாத்ரம் விருது வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் 90470 90590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !