உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி மடம் சுவாமிகள் கோபியில் சிறப்பு பூஜை

சிருங்கேரி மடம் சுவாமிகள் கோபியில் சிறப்பு பூஜை

கோபி, சிருங்கேரி சாரதா மடம் சுவாமிகள், கோபியிலுள்ள விஸ்வேஸ்ர சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். சிருங்கேரி சாரதா மடம் சுவாமிகள் பாரதி மஹா சன்னிதானம், அவரது சிஷ்யர் விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள், ஆன்மிக பயணமாக ஈரோடு மாவட்டம், கோபிக்கு நேற்று முன்தினம் வந்தனர். கோபி கிருஷ்ணன் வீதியில் உள்ள, சாரதா கிருபா இல்லத்தில் சுவாமிகள் அன்றிரவு தங்கினார். நேற்று காலை, 10:30 மணியளவில், அதே வீதியில் உள்ள, நந்தகோகுலத்தில் காத்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்க சென்றார். கோசாலை நிர்வாகிகள் பூர்ண கும்ப மரியாதையுடன், சுவாமிகளை வரவேற்றனர். ஓரிரு மாடுகளுக்கு பெயர் சூட்டினார். அதன் பின், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்ர சுவாமி கோவிலில், சுவாமிகள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு சென்றனர். சுவாமிகள் வருகையால், கிருஷ்ணன் வீதி, அக்ரஹாரம், ஈஸ்வரன் கோவில் வீதி நேற்று விழா கோலம் பூண்டிருந்தது. இன்று மாலை சுவாமிகள், ஈரோடு புறப்பட்டு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !