ஆத்தூர் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ஆத்தூர்: விநாயகர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, வெள்ளை விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:00 மணியளவில், நித்ய ஹோமம், மங்கள த்ரவ்ய அபிஷேகம், ராஜ உபசாரங்கள் செய்யப்பட்டன. இரவு, 8:00 மணியளவில், மூலவர் வெள்ளை விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசம், அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்கள் அணிவித்து, தீபாராதனை நடந்தது. அதேநேரம், உற்சவர் வெள்ளை விநாயகருக்கும், சிறப்பு தீபாராதனை நடந்தது. உற்சவர் விநாயகர், சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாக உட்புறத்தில் மூன்று முறை வலம் வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆத்தூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். அதேபோல், ராணிப்பேட்டை செல்வ விநாயகர், கடைவீதி விநாயகர், நரசிங்கபுரம், கோட்டை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.