வடமதுரை சர்வ சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3460 days ago
வடமதுரை : வடமதுரை திருச்சி ரோட்டில் மங்கம்மாள் கேணி அருகில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் கோயில் உள்ளது. தகர மேற்கூரையுடன் திறந்தவெளியாக இருந்த இக்கோயிலை புதுப்பிக்க ஊர்மக்கள் முடிவு செய்து கடந்த அக்டோபரில் பால-ாலய பூஜை நடத்தினர். தொடர்ந்து கோயில் திருப்பணி நடந்து முடிந்தது. கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் மாலை தீர்த்த குடங்கள் அழைப்புடன் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் முடிந்து கடங்கள் புறப்பாடாகி புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.