மானாமதுரை சித்திரை திருவிழா: ஆனந்தவல்லி , சோமநாதர் வீதி உலா
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா முதல் நாள் மண்டகப்படியை முன்னிட்டு சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து மாலை கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும்,சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளினர்.ஏராளமான பக்தர்கள் சுவாமிகளை வழிபட்ட பின்னர் சுவாமிகள் 4 ரத வீதிகளின் வழியே வீதி உலா வந்தனர்.அப்போது ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாக அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 28ம் தேதி காலை 10:35 மணியிலிருந்து 11:00 மணிக்குள் நடைபெற உள்ளது. மறுநாள் 29ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா மே.1ம் தேதி நடைபெற உள்ளது.