உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரோப்கார் பணிகளை எப்போது துவங்குவார்கள்?

ரோப்கார் பணிகளை எப்போது துவங்குவார்கள்?

குளித்தலை: அய்யர்மலை ரத்தினகீரிஸ்வரர் கோவிலுக்கு, ரோப் கார் அமைக்கும் திட்டத்தை, எப்போது துவங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குளித்தலை அடுத்த அய்யர்மலை சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகீரிஸ்வர் கோவிலில், 6.70 கோடி ரூபாய் மதிப்பில், ரோப்கார் (கம்பிவட ஊர்தி) அமைக்க கடந்த, பிப்., 9ல் பூமி பூஜை நடந்தது. பணிக்கான ஒப்பந்தம், கோல்கட்டா மாநிலம் ரோப்வே சிசார்ஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள் பங்களிப்பாக, 3.10 கோடி ரூபாய், அரசின் நிதியாக, 3.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பூமி பூஜைக்காக பில்லர் அமைக்கப்பட்டதுடன், பணிகள் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால், கிடப்பில் போட்டுள்ளதாக, பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கட்டுமான பணிகளை துரிதப்படுத்த, அய்யர்மலை சுற்றுவட்டார மக்கள், குடிபாட்டுக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !