சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவில் உண்டியல் திறப்பு
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்களை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ஸ்ரீஜோதி முன்னிலையில் திறக்கப்பட்டது. கோவில் நிர்வாக அலுவலர் முருகன் தலைமையில் சிதம்பரம் சரக ஆய்வாளர்கள் ராமநாதன், கோவில் அலுவலர்கள் வாசு, ராஜ்குமார், முத்துக்குமரன் ஊழியர்கள் உள்ளிட்டோர் உண்டியல் பணத்தை பிரித்து எடுத்தனர். இதில், உண்டியல் காணிக்கையாக 5 லட்சத்து 97 ஆயிரத்து 966 ரூபாய், 22 கிராம் தங்கம், 78 கிராம் வெள்ளி, அமெரிக்கா டாலர் ஒன்று, மலேசியா ரிங்கட் 7, இலங்கை ரூபாய் 3 என 11 கரன்சிகள் இருந்தன. இதனை சிதம்பரம் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் பரமசிவம் மற்றும் வங்கி அலுவலர்கள் கணக்கிட்டு டெபாசிட் செய்தனர். உண்டியலில், செல்லாத 500 ரூபாய் 13ம், 1,000 ரூபாய் ஒன்றும் கிடந்தது குறிப்பிடத்தக்கது.