ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி!
ADDED :5133 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், பக்தர்களுக்காக கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையே தரிசனத்தின்போது தகராறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தனி அம்பாள் சன்னிதியில் பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக கம்பிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் இணை கமிஷனர் கூறியதாவது: மூன்றாம் பிரகாரத்தில் மழை நீர் ஒழுகுவதை தவிர்க்க,மேல்தளத்தில் 25 லட்ச ரூபாயில், தட்டு ஓடு பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி, அம்பாள் சன்னிதியில் பக்தர்களுக்காக 20 லட்ச ரூபாயில் ஸ்டீல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தீர்த்தமாடுவோருக்காக மூன்றாம் பிரகாரம் தெற்கு பகுதியில் 4 லட்ச ரூபாயில் உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளன, என்றார்.