பக்தர்களிடம் குரங்குகள் வழிப்பறி
ADDED :3127 days ago
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்களை பயமுறுத்தும் குரங்குகளை காட்டிற்குள் விரட்ட கோயில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இக்கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், பழம், உணவுப் பொருட்களை குரங்குகள் பயமுறுத்தி வழிப்பறி செய்கின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்துடனேயே கோயிலுக்கு செல்ல வேண்டி உள்ளது. அழகர்கோவில் வனத்தில் இருக்கும் குரங்குகளை வேறு ஏதாவது காட்டில் விட முடியுமா என வனத்துறையினருடன், கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து ஆலோசித்து வருகிறார்.