சோமநாத ஈஸ்வரர் கோவிலில் வரும் 25ல் உற்சவம் துவக்கம்
ADDED :3129 days ago
பெத்தநாயக்கன்பாளையம்: சோமநாத ஈஸ்வரர் கோவிலில், வரும், 25ல் உற்சவம் நடக்கிறது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கல்யாணகிரி, தேன்மலை சோமநாத ஈஸ்வரர் கோவிலில், வரும், 25 சனி பிரதோஷம் முன்னிட்டு, மாலை, 5:00 மணிக்கு மேல், மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படும். அடுத்தநாள் மதியம் முதல் அமாவாசை துவங்குவதால், அன்று மாலை, 6:00 மணியளவில், கோவில் வளாகத்தில் ருத்ர யாகம், இரவு, 7:30 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது. அன்னதானத்துக்கு அரிசி, பருப்பு வகைகள் கொடுக்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.