ராமானுஜர் அவதார தங்க ரத யாத்திரை
ADDED :3216 days ago
ராஜபாளையம்: ராமானுஜர் ஆயிரமாவது அவதார நாளை முன்னிட்டு மூன்று நாள் கொண்டாட்டம் மற்றும் தங்க ரத யாத்திரை புறப்பாடு ராஜபாளையத்தில் நடந்தது. இதையொட்டி என்.ஆர்.கே மண்டபத்தில் தங்க விக்ரகத்திற்கு திருமஞ்சனம், சேவை சாத்துமுறை, தீர்த்த பிரசாதம் பூஜைகள் நடந்தன. ரதயாத்திரையை ஆழ்வார் திருநகரி ரெங்க ராமானுஜ ஜீயர், ஆண்டாள் திருக்கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் துவக்கி வைத்தனர். யாத்திரை ராஜபாளையம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீரெங்கம், மதுராந்தகம், காஞ்சிபுரம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்கிறது.