உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

கமுதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

ராமநாதபுரம்: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு வெள்ளிக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். ஏப்.,7ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,11ல் பக்தர்கள் மாவிளக்கு காணிக்கை செலுத்துகின்றனர். ஏப்.,12ல் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஏப்., 14ல் பூக்குழி இறங்கிய பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்று கோயில் வந்தடைகின்றனர். அன்று மாலை 2007 திருவிளக்கு பூஜை, இரவு புஷ்ப ஊஞ்சல் நடக்கிறது. ஏப்., 15 மாலை 4:00 மணிக்கு அம்மன் கரகத்துடன் முளைப்பாரி சுமந்த பெண்கள் கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு குண்டாறு செல்கின்றனர். அங்கு முளைப்பாரி கரைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !