உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஒரே பீடமான நீலாம்பிகை பீடத்தில் மாரி, காளி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். தமிழகத்தில் இங்கு மட்டுமே இத்தகைய சிறப்பு பெற்ற கோவில் உள்ளது. இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த, 17ம் தேதி, பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கடந்த, 19ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து தினமும் பல்வேறு ஆன்மிக அமைப்பினர், உபயதாரர்கள் சார்பில் அம்மன் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. இதில், ஆதிபராசக்தி, துர்கை, பராசக்தி, காமாட்சியம்மன் அலங்காரங்களில் அம்மன் அருள்பாலித்தார்.

இன்று, 24ம் தேதி பராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் ஆதிபராசக்தி, 25ம் தேதி ஆயிர வைசிய நகரத்து செட்டியார் சங்கம் சார்பில், ராஜராஜேஸ்வரி, 26ம் தேதி கோவில் சார்பில் தேவி கருமாரியம்மன், 27ம் தேதி கொங்கு வேளாள கவுண்டர் சமூக நல மன்றம் சார்பில் மீனாட்சியம்மன், 28ம் தேதி குரும்பா நல சங்கம் சார்பில், சிக்கம்மன், 29ம் தேதி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், மாளிகைபுரத்து அம்மன், 30ம் தேதி ஊட்டி நகர பாவ்ஷார ஷத்ரிய மராட்டியர் சமூகத்தினர் சார்பில் அம்பாபவானி, 31ம் தேதி தாசப்பளஞ்சிக சமூகத்தார் சார்பில், ராஜராஜேஸ்வரி, 1ம் தேதி நரசிம்மன் பாலாஜி குழுவினர் சார்பில், மகாலட்சுமி, 2ம் தேதி ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் மூகாம்பிகை, 3ம் தேதி நீலகிரி மாவட்ட ஈழுவா தீயா நல சங்கம் சார்பில், கொடுங்களூர் அம்மன், 4ம் தேதி வெங்கிடசாமி நாயுடு குழுவினர் சார்பில், வடிவாம்பிகை, 5ம் தேதி முனி உச்சண்ணா குழுவினர் சார்பில் திரிசூலநாயகி, 6ம் தேதி செங்குந்த முதலியார் சங்கமம் சார்பில், பூப்பல்லக்கு, 7ம் தேதி தெய்வீக நற்பணி அறக்கட்டளை சார்பில், புவனேஸ்வர, 8ம் தேதி நீலமலை தெய்வீக நற்பணி மன்றம் சார்பில், ராஜகாளியம்மன், 9ம் தேதி அருந்ததியினர் சமுதாய நல சங்கம் சார்பில், பட்டத்தரசியம்மன், 10ம் தேதி நீலகிரி மாவட்ட படுக இன சமுதாயத்தினர் சார்பில், ஹெத்தையம்மன், 11ம் தேதி சரஸ்வதி சங்கம் சார்பில், சரஸ்வதி, 12ம் தேதி நீலகிரி மாவட்ட நாயுடு மகா சங்கம் சார்பில் அங்காளம்மன், 13ம் தேதி ஊட்டி இரட்டைபிள்ளையார் கோவில் தெரு பொதுமக்கள் சார்பில், திருவளர்நாயகி, 14ம் தேதி தேவாங்கர் சமூகத்தினர் சார்பில் ராமலிங்க சவுடேஸ்வரி, 15ம் தேதி கராசி மராட்டா சங்கம் சார்பில் தையல் நாயகி, 16ம் தேதி கோடப்பமந்து புதிரி வண்ணார் இனத்தார் சார்பில் மகாமாரி, 17ம் தேதி கேரள பக்த ஜன சமாஜம் சார்பில், பகவதி அலங்காரங்களில் அம்மன் தேர்பவனி நடக்கிறது. முக்கிய தேர்த்திருவிழாவான வரும் 18ம் தேதி, மதியம் 1:55 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது. 19ம் தேத நீலாம்பிகை, 20ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 21ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !