உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் பட்டத்துளசியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கூடலுார் பட்டத்துளசியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கூடலுார் : கூடலுார், பட்டத்துளசியம்மன் கோவில், 60வது ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கூடலுார், புதிய பஸ் ஸ்டாண்ட் சுங்கம் பகுதியில் உள்ள பட்டத்துளசியம்மன் கோவில், 60வது ஆண்டு கும்பாபிஷேக திருவிழா, கடந்த, 21ல் காலை, 7:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து லஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. கூடலுார் விநாயகர் கோவிலிருந்து தீர்த்த குடங்களை கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் முதற்கால யாகபூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. 11:00 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு விக்னேஷ்வரா பூஜை, வேதிக தரணா மண்டலபூஜை, மூன்றாம்கால யாக பூஜைகள் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு அத்திரஸ்தாபனம், அஷ்பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று காலை, 7:30 மணிக்கு விநாயகர் வழிப்பாடு; நான்காம் காலயாக பூஜை, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 9:30 மணி முதல், 10:15 மணிக்குள் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம், 57வது குருமகா சன்னிதானம், தென்மண்டல சிவஞானமாமணி சிவஞானகுரு ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில், கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !