விஸ்வேஸ்வர சுவாமி கோவில் காணிக்கையில் ரூ.1.37 லட்சம் "செல்லாத நோட்டு
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் உண்டியல்கள், நேற்று திறந்து திறந்து எண்ணப்பட்டன. ஈரோடு அறநிலையதுறை உதவி கமிஷனர் முருகையா, செயல் அலுவலர் (பொறுப்பு) அழகேசன், ஆய்வர் பொன்னுதுரை மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், காணிக்கைகளை பக்தர்கள் எண்ணினர். ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில் உண்டியலில், மூன்று லட்சத்து, 54 ஆயிரத்து 638 ரூபாய் ரொக்கம்; 53 கிராம் தங்கம், 90 கிராம் வெள்ளி இருந்தது. ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் உண்டியல்களில், ஐந்து லட்சத்து, 15 ஆயிரத்து, 396 ரூபாய்; 25 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளி இருந்தது. இரண்டு கோவில் உண்டியல்களிலும், மதிப்பு நீக்கப்பட்ட பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள், ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 500 மதிப்பில் இருந்தன. கோவில் வங்கி கணக்கு எண்ணுடன், ரிசர்வ் வங்கியில் மாற்ற, இந்த நோட்டுக்கள், சென்னை அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற ரூபாய் நோட்டு, வழக்கம் போல் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.