உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

அவிநாசி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

அவிநாசி: அவிநாசி, அஞ்சல் நிலைய வீதி, ஸ்ரீ அரசமரத்து விநாயகர், ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா நடந்தது. கோவிலில்,  17ம் தேதி, பொட்டுச்சாமி பொங்கல், அம்மனுக்கு அபிஷேகத்துடன் விழா துவங்கியது.  கம்பம் எடுத்து வருதல்,  அபிஷேகம், தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.  நேற்று காலை, அம்மனுக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து சென்று, கோவில்  வளாகத்தில், பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  மாலை, அக்னி குண்டம் எடுத்து வருதல், கம்பம் கங்கையில் விடுதல்  நடந்தது. நாளை காலை, மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா  மற்றும் அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !