ஜெனகை நாராயண பெருமாள் கோயில் பங்குனி உற்சவம்
ADDED :3122 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா, நாளை(மார்ச் 28) காலை 10:35 மேல் 12:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தினம் இரவு 7:00 மணிக்கு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு வீதி உலா நடைபெறும். திருவிழாவின் ஏழாம் நாள் ஏப்ரல் 3-ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:25 மணிக்குள் திருக்கல்யாணம், பத்தாம் நாள் ஏப்ரல் 6-ம் தேதி மாலை 5:00 மணிக்கு பூச்செரிதல் விழா மற்றும் பதினொன்றாம் நாளான ஏப்ரல் 7-ம் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது, விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.திருவிழா நாட்களில் நாள்தோறும் மாலை கோவில் மண்டபத்தில் இளங்கோ இலக்கிய கழகம் சார்பில் பக்தி இலக்கிய சொற்பொழிவு நடைபெறும்.