உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண நாமம் உச்சரியுங்கள்: இஸ்கான் குரு ஜெயபதாக சுவாமி மகாராஜ்

கிருஷ்ண நாமம் உச்சரியுங்கள்: இஸ்கான் குரு ஜெயபதாக சுவாமி மகாராஜ்

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் இஸ்கான் பொன் விழா, ராமானுஜர் ஆயிரமாவது விழா நடந்தது. இஸ்கான் குரு ஜெயபதாக சுவாமி மகாராஜ் பேசியதாவது: நாம் அனைவரும் இந்த ராமானுஜாச்சாரிய விழாவிற்காக அர்ப்பணித்துள்ளோம். நமது சம்ஸ்காரங்கள் எல்லாம் கீதை போன்ற புத்தகங்களை அடிப்படையாக கொண்டது. ராமானுஜாச்சார்யா தன் குரு, யமுனாச்சாரியாவின் கொள்கைகளை உணர்ந்து, பின்பற்றி வாழ்ந்தவர். அவரை போலவே நாமும், நம் குருவை உணர்ந்து செயல்பட வேண்டும்.  பகாவானின் எல்லையற்ற ரூபங்களில் அற்புதமான ரூபம் நாராயண ரூபம், எளிதில் அணுகக்கூடிய ரூபம் கிருஷ்ண ரூபம். எனவே இந்த கலியுகத்தில் நாம் கிருஷ்ண நாமத்தை உச்சரித்து அருள் பெறுவோம், என்றார்.ஸ்ரீமத் பரமஹம்ச ஸ்ரீரங்க ராமானுஜ ஜீயர் சுவாமி, பால வைஷ்ணவ பெரியோர்களின் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !