உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் மாதேஸ்வரன் கோவிலில் விழா

கூடலுார் மாதேஸ்வரன் கோவிலில் விழா

கூடலுார்: கூடலுார், மண்வயல் மாதேஸ்வரன் திருத்தேர் ஊர்வலம் சிறப்பாக நடந்தது. கூடலுார் மண்வயல் மாதேஸ்வரன் கோவில், தேர் திருவிழா கடந்த, 24ல் துவங்கியது. மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, பழங்குடி மக்களின் ஊர்வலம், திருவிளக்கு பூஜை, தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  நேற்று முன்தினம், நிர்மாலய தரிசனம், கணபதி ஹோமம், சங்காபிஷேகம் நடந்தன. மாலையில், ஸ்ரீமதுரை மகாவிஷ்ணு கோவிலிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேர், ஊர்வலமாக சென்றது. பக்தர்கள் தாலப்பொலி விளக்கு ஏந்தி வந்தனர். ஊர்வலம் புத்துார்வயல், மண்வயல் வழியாக கோவிலை வந்தடைந்தது. ஏற்பாடுகளை, விழா கமிட்டி செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !