ராமானுஜரின் 1000 வது ஆண்டு விழா எமனேஸ்வரத்தில் ஜீயர்கள் வருகை
ADDED :3121 days ago
பரமக்குடி: எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார்சமேத வரதராஜப்பெருமாள் கோயிலில்ராமானுஜரின் 1000 வது ஆண்டு விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை4:00 மணிக்கு உற்சவர் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இந்தவைபவத்தில்ஆழ்வார் திருநகரி பரமஹம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர்மற்றும் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர்கலந்து கொண்டனர். தொடர்ந்து ராமானுஜர் பெருமாள் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வீதிவலம் வந்தார். இதில்பரமக்குடி, எமனேஸ்வரத்தை சேர்ந்த சவுராஷ்ட்ர சபையினர், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு ஜீயர்சுவாமிகளின் ஆசி பெற்றனர்.