ஆதிஜெகநாத பெருமாள் பங்குனி பிரமோத்ஸவம்: ஏப்.,1ல் கொடியேற்றம்
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோத்சவ விழா ஏப்.,1ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாத பெருமாளுக்கு பங்குனி பிரமோத்ஸவம் வருகிற ஏப்.,1 சனிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விஷேச திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள், சாற்றுமுறை கோஷ்டி பாராயணங்கள் நடக்கும். தொடர்ந்து 11 நாட்களிலும் காலை, மாலை நேரங்களில் பல்லக்கு, வாகனம், சேவை சாதித்தல், தீர்த்தவாரி உற்சவம் உள்ளிட்டவை நடக்கிறது. ஏப்., 9 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் நான்கு ரதவீதிகளிலும் பிரம்மாண்ட தேரில் வலம் வருகிறார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.