உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா

கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா, வரும் 31ம் தேதி துவங்குகிறது. விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா, வரும் 31ம் தேதி துவங்கி, ஏப்ரல் 9ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 9:00க்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.  தினசரி வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் ஏப்ரல் 8ம் தேதி தேரோட்டம், 9ம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர்கள் மணிமுக்தாற்றுக்கு சென்று, அங்கிருந்து காவடி ஊர்வலத்துடன் கோவிலுக்கு வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்றிரவு கொடியிறக்கம் நடக்கிறது. முன்னதாக, கிராம தேவதைகளான செல்லியம்மன், அய்யனார் சுவாமிகளுக்கு நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !