காரணப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
அனுப்பர்பாளையம் : தொங்குட்டிபாளையத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பூமி நீளா சமேத சுயம்பு காரணப்பெருமாள் கோவிலில், திருப்பணி மேற்கொண்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா, வரும், 30ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி, நாளை மாலை, புற்று மண் எடுத்தல், திருமுறை சாற்றுதல், அஷ்டதிக் பாலகர்கள் பூஜை; 28ம் தேதி காலை, 8:00 மணிக்கு புனித நீர் ஊர்வலமாக எடுத்து வருதல், காப்பு கட்டுதல், ஸ்ரீ கோமாதா பூஜை, அனைத்து மூர்த்திகளும் கடங்களில் எழுந்தருள செய்து, யாகசாலை பிரவேசம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
வரும், 29ம் தேதி காலை, 8:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், பிரசாதம் வழங்குதல்; மாலை, 4:00 மணிக்கு மூலவர் உற்சவர், 81 கலச ஸ்நான திருமஞ்சனம், "கோ பூஜை, கன்யா பூஜை, திருமூர்த்திகளின் திருக்கண் திறத்தல் நடக்கிறது. வரும், 30ம் தேதி, காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் விமான கோபுரம் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழு தலைவர் மணி, பொருளாளர் துரைசாமி, ஆலோசகர் செந்தில்நாதன் உள்பட பலர் செய்து வருகின்றனர்.