பாலமுருகன் சுவாமி சிலையில் சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு
ADDED :3121 days ago
புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சுவாமி சிலையில் சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி கோவிலில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13ம் தேதி, சூரியன் கோவிலின் நேர்க்கோட்டில் உதிக்கும். அன்று கோவிலின் கற்பகிரகத்தில் உள்ள மூலவர் சிலை மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நடக்கும், அதனையொட்டி சுவாமி சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். இந்நிலையில் இந்தாண்டு பங்குனி 13ம் தேதியான நேற்று சூரிய ஒளி படும் நிகழ்வு நடந்தது. காலை 6:22 மணி முதல் காலை 7:10 மணிவரை சுவாமி சிலை மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடந்தது. அதனையொட்டி பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.