தாயமங்கலம் கோயில் பங்குனி விழா நாளை கொடியேற்றம்!
இளையான்குடி: இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா மார்ச் 28 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றைய தினம் காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து இரவு கொடியேற்றுதல் நடக்கும். மார்ச் 29, 30 ல் சிம்ம வாகனம், மார்ச் 31 ல் குதிரை வாகனம், ஏப்., 1 ல் காமதேனு வாகனம், ஏப்., 2 ல் அன்ன வாகனம், ஏப்., 3 ல் பூத வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா வருகிறார். ஏப்., 4ல் பொங்கல் விழா நடக்கும். ஏப்., 5 ல் தேரோட்டம், ஏப்., 6ல் பால்குட ஊர்வலம் நடக்கும். அன்று மாலை 6:15 மணிக்கு அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சியும், இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் அருள்பாலிப்பும் நடக்கும். ஏப்., 7 இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கும். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செய்து வருகிறார். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி பகுதியில் இருந்து வரும் பக்தர்களுக்காக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.