உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் திருவிழா: பக்தர்கள் பால்குடம்

மாரியம்மன் திருவிழா: பக்தர்கள் பால்குடம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், குளித்தலை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், காமன் கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக துவங்கியது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில் காமன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் காமன் விழா நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு கொடிக்கால் தெருவில் காமன் பண்டிகையை கொண்டாடும் வகையில், பக்தர்கள் சிவன், பார்வதி, பரிவார சுவாமிகளின் வேடமணிந்து, லாலாப்பேட்டையின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர்.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த, வரகூர் மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படும். அதன்படி நேற்று, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர், பால் குடம் எடுத்து வந்தனர். பின், கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.

* குளித்தலை அடுத்த பாப்பக்காப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பாப்பக்காப்பட்டி, இரும்பூதிப்பட்டி, மலையாண்டிப்பட்டி உள்ளிட்ட எட்டு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், நேற்று, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அவர்கள், குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !