உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் 400 பேர் புனித பயணம்

பக்தர்கள் 400 பேர் புனித பயணம்

மேட்டூர்: மண்டலபூஜை நிறைவடைந்த நிலையில், தங்கமாபுரிபட்டணம் சக்தி மாரியம்மன் கோவில் பக்தர்கள், 400 பேர், ஆறு பஸ்களில் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர், தங்கமாபுரிபட்டணம், குண்டுக்கல் சக்தி மாரியம்மன் கோவில் புதுப்பித்து, கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, 48 நாட்கள் நடந்த மண்டல பூஜை, நேற்று, 108 சங்காபிஷேகத்துடன் நிறைவடைந்தது. தற்போது, தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், திருத்தங்கல் காட்டுவளவு பகுதிகளை சேர்ந்த சக்தி மாரியம்மன் கோவில் பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள், 400 பேர், நேற்று மாலை, ஆறு பஸ்களில், ராமேஸ்வரத்திற்கு புனித பயணம் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !