நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
ADDED :3116 days ago
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில், பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை அருகே நாரதர் மலை என்ற இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முத்துமாரியம்மனுக்கு, பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி, புதுக்கோட்டை மற்றும் நார்த்தாமலை சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இரவு, 7 மணியிலிருந்து அதிகாலை, 5 மணி வரை மின் அலங்கார வாகனங்களில் பூக்களை எடுத்துச் சென்று, அம்மனுக்கு சார்த்தி வழிபாடு நடத்தினர்.