உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசிவ கோஷம் முழங்க ஜம்புகேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்

சிவசிவ கோஷம் முழங்க ஜம்புகேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்

திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக, திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிவசிவ கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடிக்க, தேர் முக்கிய வீதியில் வலம்வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !