ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்
ADDED :3316 days ago
ராமேஸ்வரம்:
பங்குனி அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த
கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். நேற்று, அமாவாசை யொட்டி அதிகாலை
முதல் ராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். பின், முன்னோர்
ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள்
மூலம் திதி பூஜை செய்தனர். பின், அக்னி தீர்த்த கடலில் சிவ சிவ என
கோஷமிட்டபடி புனித நீராடினர். பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில்
நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். இதையடுத்து கோயிலில்
சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் தரிசனம்
செய்தனர்.