உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் காணிக்கை ரூ.4.52 லட்சம்

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் காணிக்கை ரூ.4.52 லட்சம்

ஊத்துக்கோட்டை : பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம், 4.52 லட்சம் ரூபாய் இருந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது. இங்கு சிவபெருமான் விஷத்தை உண்ட மயக்கத்தில் அன்னை சர்வ மங்களா தேவியின் மடியில் படுத்து உறங்குவது போன்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வால்மீகி முனிவர் வழிபட்ட வால்மீகிஸ்வரர், ராமபிரான் வழிபட்ட ராமலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், பிரதோஷ விழா, சிவராத்திரி, அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு சென்று சுவாமியை வழிபடுகின்றனர்.

இங்கு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோவில் நிர்வாகம் சார்பில், 12 உண்டியல்கள் வைக்கப்பட்டன. நேற்று இந்த உண்டியலில் உள்ள பணம் எண்ணும் பணி நடந்தது. சித்துார் மாவட்ட கோவில்கள் சிறப்பு அதிகாரி லதா முன்னிலையில், கோவில் மேலாளர் வெங்கடமுனி தலைமையில் கோவில் ஊழியர்கள் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, 4 லட்சத்து, 52 ஆயிரத்து, 162 ரூபாய் இருந்தது. இது, கடந்த 48 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !