கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3116 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. பின்னர், காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, வரும் 8ம் தேதி தேரோட்டம், 9ம் தேதி பங்குனி உத்திரத்தன்று உற்சவர்கள் மணிமுக்தாற்றுக்கு சென்று, அங்கிருந்து காவடி ஊர்வலத்துடன் கோவிலுக்கு வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்றிரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.