பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி விழா கொடியேற்றம்
ADDED :3171 days ago
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்பின் முருகன், வள்ளி- தெய்வானை, சிவன், அறம்வளர்த்த நாயகி, நந்தி உட்பட தெய்வங்களுக்கும், கொடி மரத்திற்கும் தீபாராதனை நடந்தது. 10 நாட்கள் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.8ல் நடக்கிறது. வர்த்தகர் சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், நாகராஜன், செயல்அலுவலர் கிருஷ்ணவேணி, மண்டகப்படிதாரர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.-