உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானத்தை அடைய உபதேசம் தேவை: விதுசேகர பாரதீ சுவாமி அறிவுரை

ஞானத்தை அடைய உபதேசம் தேவை: விதுசேகர பாரதீ சுவாமி அறிவுரை

மதுரை: ‘ஞானத்தை அடைய குரு உபதேசம் தேவை,’’ என விதுசேகர பாரதீ சுவாமி பேசினார். மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் பக்தர்களுக்கு பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி நேற்று ஆசி வழங்கினர். விதுசேகர பாரதீ சுவாமி பேசியதாவது: ‘வாழ்வில் பணம் சம்பாதிக்க வேண்டும்; அதிகாரத்தைப் பெற வேண்டும்’ என்பன உட்பட ஆசைகள் உள்ளன. புண்ணியம் செய்தால், சொர்க்கத்திற்கு செல்லலாம்; பணத்தின் மூலம் மோட்சம் கிடைக்காது. மோட்சம் அடைய ஆத்ம உபதேசம் தேவை. ஆத்மா முக்கியமானது. ஆத்மா எனில் நான்; நான் தான் ஆத்மா. நமது வம்சம், பிறப்பு, வயது, குடும்ப நிலையை தெரிந்து கொள்வது ஆத்மா. ஆத்ம ஞானத்தால் மோட்சம் கிடைக்கும் என வேதங்கள் கூறுகின்றன. ஞானம் வந்தால் அத்ஞானம், பயம், துக்கம் நீங்கும். குரு சேவை செய்து, ஆத்ம உபதேசம் பெற வேண்டும். கயிற்றை பார்த்து ‘பாம்பு’ என தவறான நினைப்பதை போக்க, ஞானம் பெற, ஞானத்தை அடைய குரு உபதேசம் தேவை. வேதாந்த உபதேசங்களை சரியாக புரிந்து கொண்டு, செயல்பட வேண்டும். ‘தமிழகம் பக்தியின் நாடு’ என, பாரதீ தீர்த்த சுவாமி கூறினார்; இங்கு குரு பக்தி அதிகமாக உள்ளது, என்றார். இன்று (ஏப்.,1) காலை 9:00 மணிக்கு பாத பூஜை, பிக்‌ஷா வந்தனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், மாலை 6:30 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இரவு 8:00 மணிக்கு சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !