உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரியகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா

கரியகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா

எலச்சிபாளையம்: பெரியமணலி, கரியகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தேர்த் திருவிழா நடந்தது. எலச்சிபாளையம் அடுத்த, பெரியமணலி கரியகாளியம்மன் கோவிலில், மார்ச், 14ல் அம்மனுக்கு கம்பம் நடப்பட்டது. 21ல் பூச்சாட்டல், 24ல் கிராம சாந்தி, 25ல் கொடியேற்றம், 28ல் சக்தி அழைத்தல், 29ல் பொங்கல் வைக்கும் வைபவம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு கரியகாளியம்மன் தேர் இழுக்கப்பட்டது. 30ல், மாரியம்மன் தேர் இழுக்கப்பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு முதலில் நாகேஸ்வரர், சிவகாமி அம்மாள் தேர், தொடர்ந்து கோவிந்தா கோஷம் முழங்க, பெருமாள் தேரையும் முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இழுத்துச் சென்றனர். ஏற்பாடுகளை திருவிழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !