உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரமங்கலம் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

சூரமங்கலம் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

சூரமங்கலம்: பழைய சூரமங்கலம் அருகே, கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சேலம், பழைய சூரமங்கலம், சோளம்பள்ளத்தில் உள்ள முருகன் கோவிலில், கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. அதை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணியளவில் கணபதி, மஹாலஷ்மி, நவக்கிரஹ ஹோமம் நடந்தது. 9:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு அபிஷேக ஆராதனை, கோபுர கண்திறப்பு நடந்தது. தொடர்ந்து, பழைய சூரமங்கலம், எம்.ஜி.ஆர்., நகரில் இருந்து புறப்பட்ட தீர்த்தக்குட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக, முருகன் கோவிலை வந்தடைந்தது. அப்போது, பக்தர்கள் காவடி எடுத்து, ஆடியபடி வந்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை, 9:00 மணிக்குமேல், 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !