மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா
ADDED :3122 days ago
திருப்பூர்: திருப்பூர் சரளைக்காடு, மாஸ்கோ நகர் வெள்ளை விநாயகர், பண்ணாரி மாரியம்மன் கோவில், 11ம் ஆண்டு பூச்சாட்டு விழா, கடந்த, 27ல் துவங்கியது. அபிஷேக, அலங்கார பூஜையை தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம், சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பட்டு எடுத்து வந்து, அம்மனுக்கு சாற்றப்பட்டது. மாஸ்கோ நகர், ஞானப்பிரகாஷம் வீதி, ரேஷன் கடை ரவுண்டானா பகுதியை சேர்ந்த பெண்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர்; பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். மதியம், உச்சிகால பூஜையை தொடர்ந்து, கிடாய் வெட்டப்பட்டு, கோழிகள் பலியிடப்பட்டன. மாலையில், பூவோடு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.