விநாயகர் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3131 days ago
பழநி: பழநி மலைக்கோயில் உபகோயில்களான உத்தர விநாயகர், கோசலை விநாயகர், அபரஞ்சி விநாயகர் போன்ற கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயில் உள்ள நடேசர் சன்னதி வீதி உத்தரவிநாயகர், கோசலை விநாயகர் மற்றும் மேற்குரத வீதி கன்னிமூல அபரஞ்சி விநாயகர் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் கணபதிஹோமம், அஷ்பந்தன மருந்து சாற்றுதல் வேள்விகாலபூஜைகள் நடந்தது. நேற்று மூன்று விநாயகர் கோயில்களில் காலை 6.30 மணிக்கு விமானங்களில் புனிதகலச நீர் ஊற்றப்பட்டது. மூலஸ்தான விநாயகர்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்தனர்.